கொலம்பியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலி: இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என தகவல்..!

Date:

தென் அமெரிக்கா நாடான கொலாம்பியாவில் உள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து ஒன்று புதையுண்டதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசாங்க பேரிடர் நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், நதிகளின் ஓரம் உள்ள பொதுமக்கள் வசிப்பிடங்களில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும், பலர் மண் சரிவில் சிக்கி புதையுண்டு போனதாகவும், அவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கூறுகையில், நிலச்சரிவில் சிக்கி 3 சிறுவர்கள் உள்பட 27 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்தார்.

குறித்த மலைப்பாதை வழியே சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தை டன் கணக்கான பாறைகளும், மண்ணும் மூடிவிட்டன.

தகவலறிந்து வந்த பேரிடர் மேலாண்மை படை பாறைகளை அகற்றி மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இருப்பினும் அவர்களால் 9 பேரை மட்டுமே மீட்க முடிந்தது.

பேருந்தில் பயணித்தவர்களில் 33 பேர் உடல் நசுங்கியும், மூச்சு திணறியும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 33 பேரில் 5 பேர் சிறுவர்கள் ஆவர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேருந்தில் பயணித்தோரின் மொத்த எண்ணிக்கை தெரியாததால் இடிபாடுகளில் வேறுயாரும் சிக்கியுள்ளார்களா என மீட்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...