எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 30 வீதத்தினால் அதிகரிக்கப்படும் மின் கட்டணத்தை செலுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விலையேற்றங்கள் அனைத்தும் மிகவும் அநியாயமானதும் எனவும், எனவே மக்களுடன் இணைந்து இதனை எதிர்த்துப் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து தற்போது கிடைக்கும் லாபம் மின்சார சபையின் பழைய நஷ்டத்தை ஈடுகட்டவே என்றும், மின்கட்டணத்தை உயர்த்த அரசு பொய்யான தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறுகிறார்.
முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையின் காரணமாக இந்த நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.