ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை நிதி நெருக்கடிகள் கலந்துரையாடல்!

Date:

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று  ரணில் விக்ரமசிங்க  தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியதுடன், எழுந்துள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தியசாலையின் பணிகளை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ். திலகரத்ன உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக்...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...