துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகளை கண்டறிய குழு!

Date:

இலங்கை துறைமுக அதிகார சபையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டறிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மூவர் உள்ளனர். அதன்படி, எம்.டி.எஸ்.ஏ.பெரேரா, காமினி குமாரசிறி மற்றும் கேஜிபி வசந்த கமகே ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுக அதிகாரசபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய தரப்பினரும் இந்தக் குழுவிற்கு அதிகாரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழுவிற்கு கிடைத்த அனைத்து முறைப்பாடுகளையும் விசாரித்து, குழுவின் அறிக்கை 6 மாதங்களுக்குள்  பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திரா தெரிவித்தார்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...