பின்தங்கிய கிராமமான ஒட்டுக்குளம் பகுதியிலிருந்து ஒரு மகப்பேற்று மருத்துவர்!

Date:

குருநாகல் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணராக ஒட்டுக்குளத்தைச் சேர்ந்த மௌஜுத் எம். பஸீல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 29 மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விஷேட வைத்திய நிபுணர்களில் 4ஆம் இடத்தில் இவர் தெரிவு செய்யப்பட்டமை பாராட்டத்தக்கதாகும்.

இவரை கௌரவிக்கும் முகமாக ஏ.ஆர்.எம். குடும்பத்தினரால் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு நாஸ் கலாசார நிலையத்தில் மௌலவி உவைஸ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் போக்குவரத்து மற்றும் மின்சார வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மௌஜுத் எம். பஸீல் முதலாவது மகப்பேற்று மற்றும் பெண் நோயியல் விசேட வைத்திய நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ‘நியூஸ் நவ்’ சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Popular

More like this
Related

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...