பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக உலகம் முழுவதும் 18 நாள் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், இன்று அனைத்து பெண் எம்பிக்களும் ஆரஞ்சு நிற புடவை அணிந்தபடி காணப்பட்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவும் ஆரஞ்சு நிற புடவையில் உரையாற்றினார்.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆடை முறை தொடர்பில் அவதானித்த அவைத்தலைவர் சுசில் பிரேமஜயநாத இது தொடர்பில் வினவியுள்ளார்.
“இன்றைய பெண் எம்.பி.க்களின் உடைக்கு பின்னால் ஏதாவது சிறப்பு இருக்கலாம்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆரஞ்சு நிறப் புடவைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன பதிலளித்தார்.