தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும்.
பல மணி நேர மின் துண்டிப்பு அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும்.
இதேவேளை மின்சாரக் கட்டணம் 60 முதல் 65 வீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டண உயர்வின் போது கேட்ட தொகை கிடைக்காததால் மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பொது மேலாளர் தெரிவித்தார். மேலும், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு கட்டணத்தை அதிகரிக்கும் போது நிவாரணம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.