மேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் ‘9A’ பெற்றவர்களுக்கு பாராட்டு விழா: மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

Date:

மேல் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து இம்முறை (2021) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி 9 ‘ஏ’ சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) மற்றும் கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற சங்கமும் இணைந்து இந்த பாராட்டு விழாவை ஏற்பாட செய்துள்ளதாக கஹட்டோவிட்ட MLSC தலைவரும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்திலுள்ள (கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம் பாடசாலைகளில் இம்முறை ‘9 ஏ’ சித்தி பெற்ற மாணவர்கள் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

பாடசாலை அதிபரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் மற்றும் பெறுபேற்றையும் விண்ணப்பப்படிவத்தில் மாணவரின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும்.

இந்நிகழ்வு எதிர்வரும் 2023 மார்ச் 02 ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் (MLSC) கட்டடத்தில் நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: செயலாளர், முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில், 48/1, ஓகொடபொல வீதி, கஹட்டோவிட்ட

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...