வரவு செலவுத்திட்ட காலத்தில் பாராளுமன்றத்தில் இருபது கோடி செலவு !

Date:

வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது நாடாளுமன்றக் கூட்டங்களுக்காக கிட்டத்தட்ட 20 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவு மற்றும் பானங்கள், எரிபொருள், மின்சாரம், நீர், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக இந்த பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற மொத்த நாட்கள் 20 ஆகும். வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது.

வரவு செலவுத் திட்ட குழு விவாதம் நவம்பர் 23ம் திகதி தொடங்கி கடந்த 8ம் திகதி வரை 13 நாட்கள் விவாதம் நடந்தது.

இதேவேளை, கடந்த 13ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விசேட நாடாளுமன்றக் கூட்டம் இடம்பெற்றதுடன், கேள்விகளைக் கேட்ட எம்.பி.க்கள் பலரும், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள் பலரும் அன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்கவில்லை.

அந்தச் சந்திப்பிற்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...