விவசாயிகளுக்கு உதவித் தொகை: ‘இதுவரை காலத்திலும் இவ்வளவு நிவாரணம் வழங்கப்படவில்லை’

Date:

நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவான விவசாயக் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக அந்த மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு இத்தொகையை வழங்குமாறு USAID அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அதற்கமைய, இந்தத் தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்  எச். எல். அபேரத்ன தெரிவித்தார்.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியானது, நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 04 பில்லியன் ரூபாவை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 04 பில்லியன் ரூபா எதிர்வரும் ஜனவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கமநல மக்கள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 1 ஹெக்டர் வரை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 10,000 ரூபாயும், 2 ஹெக்டர் வரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 20,000 ரூபாயும் வழங்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து ஒரு கொடுப்பனவு கூட திரும்பப் பெறப்பட மாட்டாது என்றும், இந்த சர்வதேச உதவிகள் அனைத்தும் நாட்டின் விவசாயிகளுக்கு இலவச மானியமாக வழங்கப்பட்டதாகவும் விவசாய அமைச்சர் கூறுகிறார்.

நாட்டின் விவசாயிகளுக்கு வேறு எந்த பயிர்ச்செய்கை காலத்திலும் இவ்வளவு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

டிசம்பர் 29 முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை

டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட...