பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடுகின்றது
22வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த மாதம் 20 தொடங்கியது. மொத்தம் 32 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இதுவரை 63 போட்டிகள் முடிவடைந்துள்ளன.
64வது போட்டியான இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா – பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் அர்ஜென்டினா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ளது.
The atmosphere at this #FIFAWorldCup final 🔥 pic.twitter.com/sKQAwrFdk3
— FIFA World Cup (@FIFAWorldCup) December 18, 2022
குரூப் சுற்றின் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அடைந்த தோல்விக்கு பின், அர்ஜென்டினா அணி பெரும் எழுச்சி கண்டது.
அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சியின் கடைசி உலகக்கோப்பைத் தொடர் என்பதால், உலகம் முழுவதும் அர்ஜென்டினா அணிக்கு ரசிகர்களிடையே அதிகளவில் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.
கால்பந்தாட்டத்தில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் மெஸ்சி எத்தனை விருதுகள், பட்டங்கள், சாதனைகள் படைத்திருந்தாலும், உலகக்கோப்பையை இதுவரை பார்த்ததில்லை. அதனால் இது மெஸ்சியின் உலகக்கோப்பை என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேசி வருகிறார்கள்.
அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.