‘ஜனநாயகத் தேர்தல்கள் மற்றும் பொதுமக்களின் பொறுப்புகள்’ பற்றின விழிப்புணர்வு நிகழ்வொன்று கடந்த 22 ஆம் திகதி புத்தளம் மாவட்ட செயலத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பெப்ரல் மற்றும் கொழும்பு தேர்தல் ஆணைக்குழுவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு புத்தளம் பெப்ரல் அமைப்பும் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது.
இதில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க, புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.எல்.ஆர் ஜயநாயக்க, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, பெப்ரல் அமைப்பு நிர்வாக இயக்குனர் சுஜீவ கயனத், புத்தளம் மாவட்ட பெப்ரல் அமைப்பின் இணைப்பாளர் ஏ.எசி.எம்.ருமைஸ் இதில் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
குறித்த நிகழ்வில் ஆண், பெண் உட்பட 58 பேர் வரை கலந்துகொண்டனர்.
அதுமட்டுமில்லாமல் சமூகத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பு உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் மதத் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.