மேல்மாகாண புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தலைவராக மள்வானையை சேர்ந்த முன்னாள் நீதிபதியரசரும், தக்கியா மத்திச்சமுமான அவர்களும், செயலாளராக முன்னால் தகவல் திணைக்கள பணிப்பாளர் ஜனாப் அலி ஹசன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதவித்தலைவர்களான முன்னாள் கொழும்பு மேயர் உசைன் மொகம்மட் அவர்களும் முன்னாள் பரீட்சை ஆணையாளர் ஏ. எஸ் மொஹம்மட் அவர்களும் இதில் காலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இதன் பிரதித் தலைவராக கலாநிதி ரவூப் ஸைன் அவர்களும், உதவிச்செயலாளராக வத்தளையைச் சேர்ந்த முஸம்மில் அவர்களும், பொருளாலராக ஸீனத் டிரேடிங் தலைவர் எம். பீ. எம். மாஹிர் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் சமூகத்தின் நலன் கருதி மேல்மாகாணத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தலைவர் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.