ஊழல்வாதிகளை முன்னிறுத்த வேண்டாம்: மார்ச் 12 இயக்கம்

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் ஊழலற்றவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கி சிறந்த நாட்டை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் மார்ச் 12 இயக்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம்  திகதி அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

வேட்புமனுவில் கையெழுத்திடும் போது அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொத்துப் பிரகடனத்தை சமர்ப்பிப்பதையும், அவற்றை வெளியிடுவதையும் அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இளைஞர்கள் உட்பட சமூகத்தில் சமீபகாலமாக எழுந்துள்ள எழுச்சியானது நாட்டில் அமைப்பு மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார்.

அரசியல் கட்சிகள் எதிர்பார்த்த மாற்றத்தை வழங்கும் வரை மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக ஹெட்டியாராச்சி கூறினார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...