பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு: அமெரிக்கா 100 மில்லியன் டொலர் நிதியுதவி!

Date:

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு  அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு அமைச்சரை வொஷிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிதி உதவியை அமெரிக்கா ஒதுக்கியது.

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் ரொலரை உணவு பாதுகாப்பு உதவு தொகையாக வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல...