ஏமாற்றத்துடன் நாடு திரும்பினார் கோட்டா!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் டுபாயில் இருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இந்த விடயத்தை விமான நிலைய கடமை அதிகாரி மற்றும் விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் இன்று காலை 08.25 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK-650 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்திகளுடன் கடந்த மாதம் 26ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார்.

டுபாய் சென்ற கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல விசா கோரியதாகவும், விசா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டுபாய் செல்லும் வழியில் அவர் டுபாயில் இருந்து பெறக்கூடிய இராஜதந்திர சலுகைகளை பெற முயற்சித்ததாகவும், டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் ஓய்வறையை பணம் செலுத்தாமல் பயன்படுத்துமாறு அவர் விடுத்த கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...