கோட்டாபய வீட்டில் பாதுகாப்பு கடமையிலிருந்த சார்ஜென்ட்டை சுட முயற்சி!

Date:

மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்
சார்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த சார்ஜன்டுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கியுடன் சந்தேகநபரான கான்ஸ்டபிளுக்கு 30  தோட்டாக்கள் வழங்கப்பட்டன, அதில் ஒன்று காணவில்லை, எனவே அந்த தோட்டாவுக்கு என்ன ஆனது என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...