சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் படைப்புகளும் தனியாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
நாளை (06) ஆரம்பிக்கவிருக்கும் 46 ஆவது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய அரங்கு எண் 206, 207 இல், இலங்கைப் புத்தகங்களுக்கான தனியான விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் பேஜஸ் புத்தக இல்ல வெளியீடுகளும் அங்கு கிடைக்கும்.