‘மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் தேயிலை தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்’

Date:

மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதும் தேயிலை தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த அபாயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஐந்நூறு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தேயிலை துாள் உற்பத்தி வெகுவாக குறைந்து வருமானம் குறைந்துள்ள இவ்வேளையில் மின்கட்டணத்தை அதிகப்படுத்தினால் தேயிலை கைத்தொழில்  பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரப் பிரச்சினை மற்றும் காலநிலை காரணமாக தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் அரசிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

இந்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை நேற்று (9) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...