ATM கொள்ளை : மூன்று வெளிநாட்டவர்கள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது!

Date:

வங்கி ATM கொள்ளையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பொலிஸ் உயர் அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மீகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரி, 02 பல்கேரியர்கள், கனேடிய பிரஜை ஒருவர் மற்றும் இலங்கையர் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை ஜனவரி 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

அதிகரித்துள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலை: புதிய விலைப்பட்டியல்

உள்நாட்டு சமையல் எரிவாயு விற்பனை நிறுவனங்களான லிட்ரோ கேஸ் நிறுவனமும், லாஃப்ஸ் கேஸ்...

ஜனாதிபதி தலைமையில் ‘தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்’ இன்று ஆரம்பம்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல் கல்லைக் குறிக்கும் வகையில்,...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின்னர் மழை

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யுமென...

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...