துருக்கியில் வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கை தூதரகத்தின் விளக்கம்!

Date:

இலங்கையில் இருந்து ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு துருக்கி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த ஒதுக்கீட்டையும் வழங்கவில்லை என அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெளிவுபடுத்துகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனியார் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களினால் துருக்கியில் வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட முகவர்களுடன் இணைந்து, துருக்கி பிராந்திய வர்த்தக சபைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள தனியார் துருக்கிய ஆட்சேர்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை துருக்கி ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தூதரகம் மேலும் கூறியது.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...