தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீதான விவாதம் நாளை!

Date:

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்றத்தின் அலுவல் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கை எனக் கூறி, இந்தச் சட்டமூலத்தை தற்போதைக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தின.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய சட்டமூலத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நேற்று தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...