‘மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் தேயிலை தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்’

Date:

மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதும் தேயிலை தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த அபாயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஐந்நூறு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தேயிலை துாள் உற்பத்தி வெகுவாக குறைந்து வருமானம் குறைந்துள்ள இவ்வேளையில் மின்கட்டணத்தை அதிகப்படுத்தினால் தேயிலை கைத்தொழில்  பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரப் பிரச்சினை மற்றும் காலநிலை காரணமாக தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் அரசிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

இந்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை நேற்று (9) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...