இராஜினாமா செய்வதற்கு முன் முஜிபுருக்கு, ஜனாதிபதி கூறிய செய்தி?

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய ஜனாதிபதி,

பாராளுமன்ற உறுப்பினர் முஜுபர் ரஹ்மானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தது தாம் தான் எனவும், அதன் காரணமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மார்ச் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்த போதிலும், அந்த திகதி உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை.

முஜிபுர் ரஹ்மானை நானே நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தேன். தற்போது அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது எனக்கு தெரியும். அவரை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்தேன், இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முஜுபர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...