சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் கிடைக்கும்: நிதி அமைச்சு

Date:

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வசதிக்கான ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...