மின்சாரக் கட்டண திருத்தத்தின் காரணமாக உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 10% வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விலை திருத்தம் இன்று (பெப்ரவரி 16) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஏனைய உணவு வகைகளின் விலை திருத்தம் இடம்பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..
மேலும் “சிற்றுண்டிச்சாலைகளில் சோலார் பேனல்களை நிறுவும்படி கேட்டோம். இதற்கு முன் மின் கட்டணத்தை உயர்த்தினாலும் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. எரிவாயு அதிகரித்த போதும் நாம் உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை எனவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.