சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் பாராளுமன்றில் உரையாற்றிய போது சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததோடு, அரசியல் சட்டத்தரணி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி இவ்வாறு அழைத்தமையானது கவலைக்குரிய விடயம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.