நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (01 ) பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய நாளை முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.
இதன்படி, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆசிரியர்கள் அனைவரும் நாளை கருப்பு நிற ஆடைகளை அணிந்து, கருப்பு பட்டிகளை அணிந்து பாடசாலைகளுக்கு பிரசன்னமாகுமாறு, ஜோசப் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஏனைய வங்கிகளையும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணைத்து கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வங்கி சேவைகள் நாளைய தினம் ஸ்தம்பிதமடையும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.