பலஸ்தீன், காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரினை நிறைவுக்கு கொண்டு வருமாறு கோரி அமைதியான ஆர்ப்பாட்டமொன்று இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச இளைஞர் ஒன்றியம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய பலஸ்தீன மக்களுக்கான நிவாரண திட்டங்களை வழங்குவதற்கு முன் வருமாறு மகஜர் ஒன்றினையும் சோசலிச இளைஞர் ஒன்றியம் கையளித்தது.