துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 1500 கிலோ தேயிலை வழங்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தொகை துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
The first donation of 1500kg of tea by the Govt of Sri Lanka arrived in Adana this morning. Ambassador of Sri Lanka & Hony.Consul for 🇱🇰 in Adana & @MFATurkiye rep were present at the airport. The donation was handed over to AFAD rep 🇹🇷@hasanthiD_SL @TR_Emb_Colombo @MFA_SriLanka pic.twitter.com/oU9PiY2I5c
— Sri Lanka in Türkiye (@slembankara) February 16, 2023
பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக சுமார் 55,000 டொலர்கள் மதிப்புடைய போர்வைகள், தற்காலிக கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் இலங்கையிலிருந்து அனுப்பப்படுகின்றன.
மேலும் இலங்கையில் உள்ள WingsofHumanity மற்றும் Soup Kitchen இன் ஒத்துழைப்புடன், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேகரிக்கப்பட்ட 1254 குளிர்கால போர்வைகள் மற்றும் 17 மின்உற்பத்தி இயந்திரங்கள் நேற்று இரவு துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.