பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் காரியாலயத்திற்கு சீல்

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குறித்த அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால், கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு பெற்றுக்கொண்ட நீதிமன்ற உத்தரவின் படி சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனக ரத்நாயக்க தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் இலங்கை திரும்பிய பின்னர் உரிய அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...