மருத்துவ பொருட்களின் கொள்முதல் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

Date:

இந்தியாவின் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் தொடர்பில்  ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா  நிறுவனம் நேற்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை (SC/FR 65/2023) தாக்கல் செய்துள்ளது.

அதற்கமைய குறித்த மனுவில் அமைச்சரவை அமைச்சர்கள், சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) உள்ளடங்கலாக 47 பிரதிவாதிகளின் பெயர்களை குறிப்பிட்டுள்ளது.

இம்மனுவானது பொது நலன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பின்வரும் விடயங்கள் கருத்திற் கொள்ளப்படுகிறது.

♦️ பதிவு செய்யப்படாத தனியார் விநியோகஸ்தரிடமிருந்து/ நிறுவனத்திடமிருந்து மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்வதில் அமைச்சரவை அமைச்சர்களின் நடத்தை ஒழுங்குகள்

♦️ பதிவு செய்யப்படாத விநியோகஸ்தரிடமிருந்து/ நிறுவனத்திடமிருந்து மருத்துவ பொருட்களை கொள்முதல் செய்வதற்கு அவர்களின் பதிவில் இருந்து விலக்களிக்க அல்லது பதிவுத் தள்ளுபடியை வழங்குவதில் NMRA வின் வகிபாவம்/ நடத்தை ஒழுங்குகள்

♦️ அவசரகால கொள்முதல் செயல்முறை உட்பட கொள்முதல் வழிகாட்டல்களுடன் இந்த கொள்முதல் செயல்முறை இணங்காமை

♦️ சுகாதார அமைச்சர் மற்றும் NMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரினால் உரிய நடைமுறை மீறல்

நாட்டின் பிரஜைகளின் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை (உறுப்புரை 12(1)) மற்றும் தகவல் அணுகளுக்கான உரிமை (உறுப்புரை 14A) ஆகியவை மீறப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றின் மீது கடுமையான அலட்சியம் கட்டப்பட்டுள்ளது என்றும் இவை பொது மக்களின் நம்பிக்கை மற்றும் பொது நிதி மீதான துஷ்பிரயோகம் எனவும் இந்த மனுவினூடாக ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த பரிவர்த்தனைகள் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் மேலதிக தகவல்களை இந்த மனுவினூடாக கோருகிறது.

இதேவேளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இடைக்கால உத்தரவினை பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

♦️ டெண்டர் ஊடாக கோரப்படாத முன்மொழிவுகளின் அடிப்படையிலான கொள்முதல் செயல்முறைகள் (unsolicited proposal) மற்றும் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் கட்டளைகள்

♦️ 38 வகையான மருந்துகளுக்குப் பதிவிலிருந்து விலக்களிப்பதற்கான அனுமதி
♦️ அத்தகைய மருந்து வகைகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தல் மற்றும்
♦️ அத்தகைய மருந்து வகைகளுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC), சுங்கப் பணிப்பாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர், Savorite Pharmaceuticals (Pvt) Limited, Kausikh Therapeutics (Pvt) Limited மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுவினை வாசிக்க: https://bit.ly/3YUcKdj

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...