மூன்றாம் உலக போரை ஏற்படுத்த வேண்டாம்: பிரான்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

Date:

உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு பிரான்ஸ் ஆயுதங்களை வழங்குவதை கண்டித்து அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது.

ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகின்றது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.

போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம், என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பிரான்ஸில் நேற்று தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக பாரிஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தியுள்ளனர்.

அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், ‘போர் வேண்டாம், அமைதி வேண்டும்’, ‘மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்’ ‘நேட்டோவை விட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை சுமந்தபடியும் பேரணியாக சென்றனர்.

இந்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்த பிரான்ஸின் மூத்த அரசியல்வாதியான புளோரியன் பிலிப்பாட் தெரிவிக்கையில், 

‘உக்ரைனுக்கு பிரான்ஸ் வழங்கும் ஆயுதங்கள் அனைவரையும் மூன்றாம் உலகப்போருக்கு நெருக்கமாக கொண்டு செல்லும். போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு’ என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...