முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனா நோக்கி புறப்பட்டனர்.
அவர்கள் மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்று அங்கிருந்து சீனாவுக்குப் புறப்படுவார்கள் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய இன்று நள்ளிரவு 12.25 மணியளவில் மலேசியன் ஏர்லைன்ஸின் MH-178 விமானத்தில் கோட்டாபயவும் அவரது மனைவியும் மலேசியாவிற்கு புறப்பட்டனர்.
ஆனால் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற, விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.முன்னாள் ஜனாதிபதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறை (V.I.P. Lounge) ஊடாகப் பணம் செலுத்தியோ அல்லது சாதாரண பயணிகள் முனையத்தின் ஊடாகவோ செல்வதற்கு வசதிகள் காணப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் சரக்கு முனையத்தை பயன்படுத்தி சென்றுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.