ஹொலிவூட் படங்களைப் பார்த்தால் சிறை: வடகொரிய பெற்றோர்களுக்கு கிம் எச்சரிக்கை!

Date:

ஹொலிவூட்  படங்களை காண தங்கள் பிள்ளைகளை அனுமதிக்கும் பெற்றோர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.

வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு கிம் ஜாங் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி பிரபலமான திரைப்படங்களை பார்வையிடுவோரின் பெற்றோர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது.

முன்னர் இதுபோன்ற குற்றங்களுக்கு கைதாகும் பெற்றோர்கள் எச்சரித்து விடுவிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போன்று ஹாலிவுட் படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உடனடி தண்டனையும் விதிக்கப்பட உள்ளது.

அதுமட்டுமின்றி வெளிநாட்டு திரைப்படங்களை சட்டத்திற்கு புறம்பாக வடகொரியாவுக்கு எடுத்துவரும் நபர்களுக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சட்டத்திற்கு உட்பட்டு வளர்க்க வேண்டும் எனவும் வடகொரிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஹொலிவூட்  அல்லது தென் கொரிய திரைப்படத்தைப் பார்க்கும் ஒரு மகன் அல்லது மகளின் பெற்றோர்கள் கட்டாய உழைப்பு முகாமில் ஆறு மாதங்கள் கழிப்பார்கள் எனவும் அவர்களின் பிள்ளைகள் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

சர்வாதிகார நாடான வட கொரியா, அதன் தலைவர் கிம் ஜாங் உன்னால் ஆளப்படுகிறது, அசாதாரண விதிகள் மற்றும் சட்டங்கள் உள்ளன.

இப்போது, மேற்கத்திய ஊடக அடக்குமுறையைத் தீவிரப்படுத்தும் முயற்சியில், மேற்கத்திய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்கள் குழந்தைகள் பிடிபட்டால், பெற்றோரை தண்டிப்பதாக வட கொரியா மிரட்டியுள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...