75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உபகரணங்கள் விநியோகம்!

Date:

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதனை ரம்யா லங்கா நிறுவனம் புத்தளம் மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது மருத்துவமனைக்குத் தேவையான 35 மடிக்கக் கூடிய கட்டில்களும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான படுக்கையும், மருந்துப் பொருட்களும் வழங்கப்பட்டன.

நாட்டில் நிலவும் மருந்துகள் தட்டுப்பாடு குறித்து மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் ரம்யா லங்கா நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பிரதான நிகழ்வு புத்தளம் பிரதேச செயலாளர் திருமதி ரங்கனா ஜயதிலக்க, புத்தளம் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுமித் அத்தநாயக்க, புத்தளம் பொலிஸ் நிலைய சிரேஷ்ட அத்தியட்சகர் எச்.சி. ஏ. புஷ்பகுமார மற்றும் ரம்யா லங்கா நிறுவனம் சார்பாக அலிசப்ரி கலந்து கொண்டார்.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...