இலங்கை பொருளாதார நெருக்கடிகளும் அதை ஈடு செய்வதில் அபிவிருத்திக்கான சவூதிய நிதியத்தின் பங்களிப்பும்

Date:

இன்று சவூதி அரேபியா மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் உலக நாடுகளில் முன்னிலையில் நிற்கின்றது.

குறித்த உதவிகள் சவூதி அரேபியாவின் பல நிதியங்களினூடாக வழங்கப்படுகிறன.

இறுதியாக துருக்கி மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தை தொடர்ந்து சவூதி அரேபியா அதனது ஸாஹிம் பிளட்ஃபாமினூடாக அனைத்து நாடுகளையும் மிஞ்சிய ஒரு உதவி தொகையை சேகரித்து வருகின்றது என்பது அறிந்ததே.

சவூதி அரேபியாவினால் வழங்கப்படுகின்ற மனிதாபிமான உதவிகளை பெற்றுக் கொள்வதில் இலங்கையும் விதிவிலக்கு இல்லை.

சவூதி அரேபியா இலங்கைக்கு 1981 ஆம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் 456,647,438 அமெரிக்கா டொலர்களை 50 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வழங்கியுள்ளது.

குறித்த உதவித்தொகையை வழங்குவதில் சவுதி அரேபியாவின் அரச நிறுவனங்களாகிய: SFD (அபிவிருத்திக்கான சவுதிய நிதியம்), MOE, MOF (வெளிநாட்டு அமைச்சு) MOIA (இஸ்லாமிய விவகார அமைச்சு), KSHRC (மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் மறுவாழ்வு மையம்) ஆகிய நிறுவனங்கள் பங்கு கொண்டுள்ளன.

அதில் SFD (The Saudi Fund For development) அபிவிருத்திக்கான சவூதிய நிதியம் வழங்கியுள்ள உதவி 432,740,296 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

இதேவேளை நேற்று (27) திங்கட்கிழமை இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரி அவர்கள், அபிவிருத்திகான சவூதிய நிதியத்தின் ஒரு தூதுக்குழுவை அவரது அமைச்சின் தலைமையகத்தில் சந்தித்தார்.

குறித்த சந்திப்பின்போது இருதரப்புடனும் தொடர்பு பட்ட முக்கியமான பல விடயங்கள் ஆராயப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான சவுதி அரேபியாவின் தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்களும் கலந்து கொண்டார்கள்.

அபிவிருத்திக்கான சவூதிய நிதியம் சவூதி அரேபியாவில் 01/09/1974 அன்று உருவாக்கப்பட்டு 01/03/1975 அன்று அதனது வேலை திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Dr. MHM Azhar (PhD)

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...