இலங்கையில் 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்: உலக வங்கி

Date:

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் குறைந்தது 5 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் எனவும் உலக வங்கி கூறுகிறது.

இலங்கையில் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 65% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கிக் குழுமத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதித் தலைவர் மார்டின் ரைஸர் தெரிவித்துள்ளார்.

வறுமை கோட்டு வரம்புக்கு அப்பாற்பட்டவர்களின் வாழ்க்கைச் செலவில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அனைத்து இலங்கையர்களுக்கும் குறிப்பிடத்தக்க நலன் இழப்பை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்

நாட்டின் நெருக்கடி நிலை பற்றிய ஒரு கட்டுரையில், இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பல ஆண்டுகளாக தவறான பொருளாதார நிர்வாகம், பலவீனமான நிர்வாகம், மோசமான கொள்கை தேர்வுகள் மற்றும் கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவின் யுக்ரைன் ஆக்கிரமிப்பு போன்ற வெளிப்புற நிகழ்வுகளின் தாக்கங்கள் காரணமாக இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...