இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் பலி!

Date:

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகின்றது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.

அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகின்றது. இதில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகின்றது.

இந்நிலையில், மேற்கு கரை நகரமான நப்லஸ் மீது இஸ்ரேல் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

சுமார் 50 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு போராளி குழுவினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் அதன் படைகள் வடக்கு, மேற்குக் கரை நகரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியது.

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும், பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் டயர்களை எரித்தும், இராணுவ வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு படைகள் அந்த நகரை விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...