காதலர் தினத்தன்று கல்முனை மேயர் விடுத்துள்ள கோரிக்கை?

Date:

எதிர்வரும் காதலர் தினத்தன்று பெற்றோர்கள்  தங்களது ஆண், பெண் பிள்ளைகளை   மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாளை மறுதினம் (14) கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்திற்காக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்

கல்முனை வாழ் பெற்றோர்கள், சமய அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் முன்வைத்த சில முறைப்பாடுகளுக்கமைய இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கல்முனை மாநகர மேயர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு காதலர் தினத்தில், இது போன்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனவே, இது போன்ற ஒரு நிலைமையை தவிர்த்துக்கொள்ளும் சமூக நோக்குடன் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியினுள் தனியார் வகுப்புக்களை நடத்துபவர்கள் கல்முனை மாநகர சபையிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

அத்துடன், தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதற்கான சில ஒழுங்கு விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கல்முனை மாநகர மேயர் ஏ. எம்.றகீப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...