தேர்தலுக்கு முன்னர் நாட்டில் நெருக்கடியை ஏற்படுத்த சிலர் சதி செய்கின்றனர்’

Date:

அடுத்த மாதம் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மின்சாரத்தை துண்டித்து, எரிபொருள் வரிசையை அதிகரித்து நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சில ஆணைக்குழுக்களிலும் சிலர் அந்த அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு  பாடசாலையில் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சிலர் மறந்துவிட்டதாகக் கூறிய அமைச்சர், மக்கள் இரண்டு, மூன்று நாட்களாக வரிசையில் காத்திருந்தனர்.ஆனாலும் அந்த பிரச்சனையை தன்னால் சமாளிக்க முடிந்தது என்று குறிப்பிட்டார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் செலவினங்களும் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காகவே மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...