மீண்டும் பாராளுமன்றில் பௌசி: முஜிபுருக்கு பதிலாக எம்.பி.யாக பதவியேற்றார்!

Date:

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று(வியாழக்கிழமை) மீண்டும் நாடாளுமன்றத்திற்கு  வருகைத்தந்துள்ளார்.

அதற்கமைய அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் பெயரிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 48 ஆயிரத்து 701 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...