ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்தது!

Date:

ரயில் சாரதிகளினால்  முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை  முடிவுக்கு வந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொழில் நடவடிக்கை காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த 23 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

புகையிரத சேவையை மேம்படுத்துவதற்கான தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் இந்திக்க தொடங்கொட இவ்விடயம் தொடர்பாக பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

இன்று காலை புகையிரத அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தரப்பினர் தொழில் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இணக்கம் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல்  ரயில்கள் வழமையாக இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...