ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு மையம்: அமைச்சர் கீதா

Date:

ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களைப் பராமரிப்பதற்கும் விசேட நிலையமொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதை துரிதப்படுத்துவதற்கான பிரேரணையை ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குழந்தைகளை பராமரிக்க முடியாமல் சிரமப்படும் அல்லது பாதுகாவலர்கள் / பெற்றோர்கள் அவர்களை மையத்தில் ஒப்படைக்கலாம்.

மேலும் சமூகத்தில் தனித்து வாழும் திறன் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும் என்றும், அது எந்த அவமானத்திற்குரிய விஷயமல்ல என்றும் அவர்  குறிப்பிட்டார்.

ஒரு குழந்தை ஆபத்தில் இருப்பதை  அல்லது குழந்தையை தத்தெடுப்பதில் சிரமம் இருந்தால் 1929 என்ற எண்ணுக்கு அழைக்கவும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த தொலைபேசி இலக்கத்தை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும் எனவும் கருக்கலைப்பு ஒரு நல்ல விடயம் என்பதை தனிப்பட்ட முறையில் தான் நம்பவில்லை எனவும்  கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

சமீப காலங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படும் பல சம்பவங்கள் பதிவாகிய நிலையில் இவ்வாறான நிலையம் அமைக்கப்படுவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...