இலங்கைக்கான நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தது!

Date:

இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  உறுதிப்படுத்தினார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளின் ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கு  7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் திட்டத்திற்கு IMF நிறைவேற்று  சபை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குநர்களுடனான அனைத்து விவாதங்களிலும் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் நிலையான நிலையை அடைவதற்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.

Popular

More like this
Related

`இலங்கை எக்ஸ்போ 2027: வர்த்தகக் குழுவை அனுப்ப பாலஸ்தீனம் விருப்பம்; இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை!

இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை...

சிறுவர் பராமரிப்பும் அவர்களின் உரிமைகளும்; ஓர் இஸ்லாமிய பார்வை- சிறுவர் தினத்தை முன்னிட்டு விசேட கட்டுரை.

இஸ்லாம் குழந்தைகளுக்குச் சிறப்பான கவனிப்பையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளது. அவர்கள் பிறந்த பிறகும்,...

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – டில்வின் சில்வா சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்று (1) முற்பகல் மக்கள்...