சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Date:

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை 3 இலட்சத்து 30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இம்மாதம் 21ஆம் திகதி வரை 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனவரியில் ஒரு இலட்சத்து 2,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...