பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும்: என்.கே.ஜயவர்தன!

Date:

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், அவற்றை மேலும் அதிகரிக்க எந்த வாய்ப்பும் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பாண் ,பணிஸ் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஒரு இறாத்தல் பாண் 150, 160, 170 எனவும் சில பகுதிகளில் 180 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த ஜெயவர்தன, அந்த விலைகளை நுகர்வோரால் தாங்க முடியாது எனவும் அதனால் பாண் ,பனிஸ்களின் விற்பனை 20 முதல் 25 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பேக்கரி தொழிலை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளால் 7000 பேக்கரிகளில் 5000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் ஜெயவர்தன கூறினார்.

Popular

More like this
Related

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...