உம்ரா யாத்திரிகர்களைச் சுமந்து சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (28) பிற்பகல் 4.00 மணியளவில் சவூதி அரேபியா அசீர் நகருக்கு வடக்கே ஷார் பாஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்ததுள்ளது.
உம்ரா செய்வதற்காக காமிஸ் முஷைத்தில் இருந்து மக்கா நோக்கி யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மஹயில் கணவாயில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
பேரூந்து கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. வாகனத்தில் பிரேக் ஒழுங்காகச் செயற்படாமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 20 பேர் ஸ்தலத்திலேயே இறந்துள்ளனர். இறந்தவர்களில் இந்தியர்கள் 16 பேர் அடங்குகின்றனர். பேருந்தில் இந்தியர்கள் தவிர வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.
காயமடைந்த 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
காயமடைந்தவர்கள் அபாஹா ஆசிர் மருத்துவமனை மற்றும் ஜெர்மன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.