இன்றும் பல துறைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்!

Date:

திட்டமிட்டபடி இன்று (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது போதாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கலந்துரையாடலில் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் எட்டப்படாததால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திலும் முக்கிய நகரங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கல்விசார் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...