இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்

Date:

தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (05) காலை கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பிரதேசத்தில்  பதிவாகியுள்ளது.

கிணற்றில் வீசப்பட்ட 21 வயதுடைய மாற்றுத்திறனாளி  சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாயும் மற்றைய வாய் பேச முடியாத சிறுவனும் கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கபிதிகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...